31 ஆம் நாள் நினைவஞ்சலியும்; வீட்டுக்கிருத்திய அழைப்பும்
அமரர் நல்லையா கல்யாணசுந்தரம்

வவுனியா நொச்சிமோட்டையை பிறப்பிடமாகவும் வைரவர் கோவில் வீதி, வைரவபுளியங்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா கல்யாணசுந்தரம் (திருச்செல்வம்) அவர்கள் 01.11.2013 வெள்ளிகிழமையன்று காலமாகியதை அறிந்து அன்னாரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் கண்ணீர் அஞ்சலி மடல் வெளியிட்டோருக்கும் பதாதைகள், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்து அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 30.11.2013 ஆம் திகதி சனிக்கிழமையன்று கல்லாறு புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 01.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளது.
அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இல.33,வைரவர் கோவில் வீதி,
வைரவர்புளியங்குளம்,வவுனியா.
தொ.பே:024-2220142
இங்ஙனம்,
குடும்பத்தினர்.