6ம் மாத நினைவஞ்சலி

அமரர் பரம்சோதி செல்வநிதி

வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரம்சோதி செல்வநிதி அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலி.

மாதங்கள் ஆறென்ன
யுகங்கள் ஆறானாலும்
மாறாதெம் துயர்
மறையாதும் நினைவு
ஆறாத்துயரிலெம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம்செல்வமே
கண் நிறைந்த நீரோடு
உன் கனவு சுமந்த நெஞ்சோடு தேடுகின்றோம்

அன்னை மனம் பரிதவிக்க
தந்தையோ தவிதவிக்க
அண்ணன்மார் அழுது புரள
அண்ணிமாரும் சேர்ந்து கொள்ள
அக்காமாரும் நிலைகுலைய
அத்தான் மாரும் தேற்றி நிற்க
பெறாமக்கள் பேதலிக்க
மருமக்களும் மனம் வருந்த
உற்ற உறவும் உறைந்து நிற்க
எமை மறந்து எங்கே போனாய்
இவ்வுலகம் மறந்து…

எங்கள் குலச் செல்வியே
இவ்வளவு சோகம் கண்டும்
சென்றாயோ சிவலோகம்
சின்னவளே எங்கள் செல்வியே….

எங்கள் செல்வியின் பிரிவுத்துயரில் பங்கெடுத்தும் நாம் ஆறாத்துயரில் மூழ்கி நின்ற வேளையில் ஆறுதல் கூறி அனைத்து வகையிலும் உதவிய உறவுகள், நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் பற்றிக்கொண்டு எதிர்வரும் 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் Quartieranlage Steibrugg , Gridelstrasse 18, 8604 Volketswi (Hegnau) மண்டபத்தில் நடைபெறும் அன்னாரின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வு
திகதி : 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை
இடம் : Quartieranlage Steibrugg , Gridelstrasse 18, 8604 Volketswi (Hegnau)
தொடர்புகளுக்கு
சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41765057621