3ம் மாத நினைவஞ்சலியும், 5ம் வருட திருமண நாளும்.

அமரர் பிரணவி பிரகாஷ் (பிறேமி)

மட்டு.புளியந்தீவு Lake Road No.2 ஐ பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவி பிரகாஷ் அவர்களின் 3ம் மாத நினைவஞ்சலி.

அன்னார், மட்டக்களப்பைச் சேர்ந்த மகாதேவன், ஜீவாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரத்தினவேல், ரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினவேல் பிரகாஷ்(U.K) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

பெளர்ணமியின் முழுநிலவே!
செந்தாமரையின் செவ்விதழே!
கார்மேகத்தின் கனிமொழியே!
எங்கள் திருநிறைச்செல்வியே!
சித்திரையின் நிலவொளியே!
எங்கள் குலவிளக்கே!
பத்தரை மாற்றுத் தங்கமே!
பரிதவிக்கின்றோம் உனையிழந்து…

வாடா மலர் போன்ற உன்வதனமும்
பால்நிலவு போன்ற உன் பளிங்கு உள்ளமும்
நிமிர்ந்த நடையும், சுருண்ட கூந்தலும் நிழலாக வருகுதம்மா!
கடலாகக்கண்ணீர் சொரிந்தோம் காவேரி நதியாக வந்திடம்மா!
எங்கள் செந்தமிழ் செல்வியே தென்றலாக வந்திடம்மா!

ஆசைகாட்டி அரவணைத்து முத்தமிட்டோம் – உனக்கு அன்று
இன்று தாய் மனம் கலங்க, தந்தை மனம் ஏங்க,
கணவன் மனம் தவிக்க,
அகல்விளக்காய் ஒளிவிட்டு சுடராகி
அணைந்து விட்டாய் அயல்நாட்டில்
உற்றார் உறவெல்லாம் ஓலமிட
ஓய்வு பெற்றாய் உலகை விட்டு…

நீ வாழ்ந்த காலம் மீண்டும் வருமா பிரணவி
சென்றடைவீர் சொர்க்கமென்ற சிவபக்தர்
நீரென்று சிந்தித்து அமைதி பெற
சேர்ந்திடுவீர் சிவபதமேயன்றி மறுபிறவி தானென்றால்
சிரம்தாழ்த்தி ஏற்கின்றோம்
அதுவும் எம்மோடே…!!!

உம் பிரிவால் துயருறும்,
இரத்தினவேல் பிரகாஷ்(கணவன் – U.K)
மகாதேவா குடும்பத்தார்(பெற்றோர்)
இரத்தினவேல் குடும்பத்தார்(மாமா, மாமி – நியூசிலாந்து)
மற்றும் உற்றார், உறவினர்கள்.

தகவல்
மகாதேவா, இரத்தினவேல் பிரகாஷ் – U.K

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இரத்தினவேல் பிரகாஷ்(கணவன்) — பிரித்தானியா தொலைபேசி: +447502235021
தொலைபேசி : +447502235021
கைப்பேசி : +447932770878
மகாதேவா — இலங்கை
தொலைபேசி : +94652222408