1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரதீபா கோகுலானந்தம்
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், கோகுலானந்தம் கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆவார்.
எங்கள் குலதீபமாய் பிரகாசித்த பிரதீபாவே
ஆண்டு ஒன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
அன்பான உன் பார்வையும் கனிவான உன் பேச்சும்
எம் மனதில் நாளும் உன் நினைவை மீட்டிக் கொண்டிருக்கின்ற தேயம்மா
பேதமின்றி அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ள
தாதி தொழில் பயின்று தாயாகமாறி சேவைகள் புரிந்தாயம்மா
அன்பாலே அனைவரையும் அரவனைத்து நீ காட்டிய
பாசம் எம் மனதைப் பெருமை கொள்ள வைக்குதேயம்மா
தேவதை நீ வாழ்வதற்கு சொர்க்கத்தில் இடம்தேடி
தெய்வம் அது ஏன்தான் எண்ணியதோயம்மா
எம்மிடமிருந்து உனைப்பிரித்து எம் துயரம் அதை
அறியாமல் கண்களை மூடி சிலையாக தெய்வமும் ஆனதேயம்மா
இனியவளே நீ பிரிந்து ஆண்டு ஒன்று போனாலும்
உன் உருவம் நம் கண்ணெதிரே தினம் தோன்றுதேயம்மா
சொல்லி அழ வார்த்தைகளில்லை சொன்னாலும்
தீரப்போவதுமில்லை
உன் இழப்பு பன்னிரண்டு மாதங்கள் ஆனாலும்
பலநூறு ஆண்டுகள் போனாலும் எம் மனதைவிட்டு
நீங்காதம்மா
உன் பசுமையான நினைவுகளோடு நாம்தினம்
உனக்காக கண்ணீர் பூக்களால் இறைவனை
பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி…. சாந்தி….சாந்தி
உன் பிரிவால் நாளும் வாடும்
அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைத்துனர், உற்றார், உறவினர்கள்
தகவல்
குடும்பத்தினர்