1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரதீப் சிவநாதன்
கனடா மொன்றியலைப் பிறப்பிடமாகவும், ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீப் சிவநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், கனடா ஸ்காபுரோவைச் சேர்ந்த சிவநாதன்(சிவா), மோகனாம்பாள்(மோகனா) தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவு, சந்தியடி 1ம் வட்டாரத்ததைச் சேர்ந்த காலஞ்சென்ற சொல்லானந்தம், நவனீதம் தம்பதிகளின் அன்புப் மூத்த பேரனும்,
அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்(தலைமை ஆசிரியர்), சோதிபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பிரசன்னா அவர்களின் பாசமுள்ள சகோதரனும் ஆவார்.
தெய்வ முகத்துடன் இன்பமாய் மலர்ந்தவனே
ஐயனின் திருப்பாதத்தில் சரணடைந்து
ஒரு வருடம் ஓடிவிட்டாலும்
நீ கிலுக்கிய சலங்கை ஒலியும்,
அணிந்திருந்த ஐயப்பன் மாலையும்,
உன் புன் சிரிப்பு நிறைந்த திருருவமும்
ஒவ்வொரு விநாடியும் எமை வந்து
கவர்ந்து செல்கிறதையா
நீ தொடர்ந்த ஐயனின் வழிபாட்டை
அப்பா, அம்மா, தம்பி நாங்கள்
தொடரக் கற்றுக் கொடுத்து
ஐயனின் அழைப்பை ஏற்று
எமை விட்டு ஓடிச்சென்றாய் ஐயா..
நீ விட்டுச் சென்ற
’’ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’’
திருமந்திரம் இன்றும்
உன் அறையில் ஒலிக்குதையா
உன் அழகுப் பாத நடை என்றும்
எமைச் சுற்றி நிற்குதையா.
நீ இங்கிருந்து எமது
கஸ்ர துன்பங்களைத் தாங்கி
எமக்கு வழிவகுத்துத் தந்த உனக்குக்
கோடான கோடி நன்றிகளை
உன் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.
ஐயா நீ மீண்டும் இவ் வையகத்தில்
பூத்து எமைக் காண
உன் வரம் வேண்டி நிற்கின்றோம்.
”ஓம் பிரதீப் சுவாமியே சரணம்”
ஐயனின் திருவருளை வேண்டி நிற்கும்
பாசமுள்ள சிவநாதன்(சிவா-அப்பா), மோகனாம்பாள்(மோகனா-அம்மா),
பிரசன்னா( தம்பி), அம்மம்மா
பெரியப்பா,பெரியம்மா, மாமாமார், மாமிமார்,
மச்சான்மார், மச்சாள்மார், உற்றார்,
உறவினர் மற்றும் நண்பர்கள்
”ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி”
தகவல்
சிவநாதன், மோகனா, பிரசன்னா