மரண அறிவித்தல்

அமரர் மார்க்கண்டு மயில்வாகனம் (பிரபல வர்த்தகர் – வவுனியா)

காரைநகர், பாலாவோடையைப் பிறப்பிடமாக கொண்டவரும் முன்னர் கலேருவலவிலும், தற்பொழுது வுனியாவிலும் பிரபல வர்த்தகராக திகழ்ந்தவரும் மார்க்கண்டு அன்ட் சன்ஸ் உரிமையாளருமான மார்க்கண்டு மயில்வாகனம் (09.11.2015) அன்று திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – சுந்தரம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம் – செல்வம் தம்பதியரின் அன்பு மருமகனும், ருக்மணிதேவியின் அன்புக் கணவருமாவார்.

காலஞ்சென்றவா்களான அன்னம்மா பாக்கியம் மற்றும் பாலசுப்ரமணியம் (வர்த்தகர்) செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

காலஞ்சென்றவர்களான பொன்னையா (வர்த்தகர்), சுப்ரமணியம் (வர்த்தகர்), செல்லத்துரை (வர்த்தகர்), தவமணி மற்றும் சிவசம்பு (வர்த்தகர்), தெய்வானைப்பிள்ளை, சிவபாக்கியம், இராஜரத்தினம் (ஜேர்மன்), சங்கரப்பிள்ளை (லண்டன்), பாலச்சந்திரன் (வவுனியா) ஆகியோரின் மைத்துனருமாவார்.

சந்தானலஷ்மி (கொழும்பு), நந்தினிதேவி (லண்டன்) ஆகியோரின் சித்தப்பாவும், மனோகரன் (மனோஜ் எக்ஸ்பிறஸ்), தேவராஜா (லண்டன்) ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் வவுனியா, வைரவப் புளியங்குளத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (12.11.2015) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று வேப்பங்குளம் மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
மனோகரன் (மனோஜ் எக்ஸ்பிறஸ்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 12.11.2015
இடம் : வவுனியா வேப்பங்குளம் மயானம்
தொடர்புகளுக்கு
மனோகரன் (மனோஜ் எக்ஸ்பிறஸ்)
தொலைபேசி : 077 751 7019