2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மார்க் பகவத்சிங்

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க் பகவத்சிங் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் பூக்கின்றன,
ஆண்டுகள் தோப்பாகின்றன
ஒவ்வொரு பூக்களிலும் நினைவுகள்
கசிகின்றன எல்லாப் பூக்களையும்
அள்ளியெடுத்து உங்கள் கல்லறையில்
வைக்கின்றோம் நினைவுகளின் வாசத்தை
எடுத்துகொள்ளுங்கள்.
நினைவுகளே எங்களை வழி
நடத்துகின்றன உங்கள் கற்பனைகளை
நிகழ்த்த இயங்குகின்றோம்,
எண்ணங்களால் உறைந்து கிடக்கிறது
உங்கள் – வியர்வையால் கட்டிய வீடு.
ஆண்டுகள் ஒரு தடவை அல்ல
அகத்தின் எண்ண அடுக்குகளில்
ஒவ்வொரு கணத்தையும்
அஞ்சலித்தே நகர்கின்றோம்
துயரை துடைத்தெறிந்து அசாதாரண
புன்னகை சொரியும் உங்கள் நேச வதன
அருகாமையை உணர்ந்தபடி.
எங்கள் வெய்யிற் காலங்கள்
குதூகலமிழந்து போயின
இன்னொரு நாள் உன்னோடு
இருக்க ஆசை கொள்கின்றோம்
எங்கள் செல்வமே ஏன் விட்டுப் போனாய்?
எத்தனை ஆறுதல் சொல்லியும்
அடங்காத மனசை உருக்கி
அஞ்சலி செய்கின்றோம்
எங்கள் விம்மலை எப்படிதான்
எழுதித் தீர்ப்பது?.. !
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர், உறவுகள்
தகவல்,
குடும்பத்தினர்.