1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ரமணன் சிவபரமானந்தன் (நேசன்)

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வலே மாநில சியோன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரமணன் சிவபரமானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈருடல் ஓருயிராய் இணைந்திருந்தோம்
கண்ணின் கருமணியாக காத்த என்னை
இன்று கண்ணீர் மல்கவிட்டு சென்றதேனோ
உயிராய் உனைநேசித்தேன் நான்
உயிரினினும் மேலாக நீயெனை நேசித்தாய்
உனைப் பிரிந்து ஈராறு மாதங்கள் – ஆயினும்
ஊன் உறக்கமின்றி நாளும் பொழுதும்
உன் நினைவோடு தவிக்கின்றேன்

என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்

உன் பார்வை எப்போதும் என் கண்ணுக்குள்
நீ என்னை அழைப்பதுபோல் ஒலியென் செவிகளில்
போகுமிடமெங்கும் நீ நிற்பதுபோலொரு பிரம்மை
காற்றும் உன் சுவாசம் நிரப்ப மறுத்ததேன்

உன் நினைவோடு துடிக்கும் உன் பெற்றோர்
உயிர் துடிப்போடு தவிக்கும் சகோதரங்கள்,
மைத்துனர், மைத்துனிகள்
உன் பிரிவுத் துயர் தாங்காத
வலே மாநில மக்கள்
ரமணன் மாமா வருவாரென்றே
இன்று வரை காத்திருக்கும் உன் செல்லங்கள்

ஆண்டொன்றாகியும்
என்றும் நீங்காதநினைவுகளோடு
எம் நெஞ்சில் என்றும்
அணையாத சுடராக வாழ்கிறாய்
வாழ்கை என்பது இது தானா ரமணா
நல்லது பல செய்தாய்
எல்லோர்க்கும் நன்மைகளும் செய்தாய்

உன் நற்குணச் செயலில்
என்னையும் பங்குகொள்ள வைத்தாய்
விண்ணிலே விடிவெள்ளியாய் நீ
விழிசுரக்கும் கண்ணீரோடு நான்
ஆண்டொன்றல்ல ஆயிரமாண்டானாலும்
உன் தோற்றமும் புன்னகை பூத்த வதனமும்
என்னுயிருள்ளவரை நெஞ்சோடு சுமந்திருப்பேன்

உங்கள் ஆத்மாசாந்தியடைய
என்றும் இறைவனைவேண்டிநிற்கும்
மனைவி கவிதா ரமணன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

எனது அன்புக் கணவரின் மரணச்செய்திகேட்டு ஓடோடி வந்து எமக்கு ஆறுதலாக அருகிருந்து எமது துன்பத்தில் பங்குகொண்டவர்க்கும், இறுதிக் கிரிகையில் உதவிகள் பல புரிந்தவர்களுக்கும், மலர்வளையம், மலர்மாலைகளிட்டு கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டு, மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கிரிகையில் கலந்துகண்ணீர் அஞ்சலி செலுத்திய அன்புள்ளங்களுக்கும், அத்துடன் இன்று வரை எம்மோடிருந்து ஆறுதலளித்து பல்வகையிலும் உதவிகள் பலபுரிந்த வலே மாநில அன்புள்ளங்கள், நண்பர்கள், உறவினர்கள் யாவர்க்கும் எமது குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனது கணவரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை RLC மண்டபத்தில் 19-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் நடைபெறும்.

முகவரி:
RLC,
Rue d Loeche. 23,
1950. Sion.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு