இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வசந்தராஜன் அருணாச்சலம்

ஆண்டுகள் உருண்டோடி இரண்டாயின
உன் நினைவினால் எம் பரிதவிப்போ
பசுமையையாய் புத்துயிர் பெறுகின்றன!

உன் உறவெல்லாம் கலங்காத நாளில்லை
உன்னைப்பற்றி கதையாத பொழுதில்லை
இதயம் உன் நினைவில் துடிக்க மறந்ததில்லை!

நாம் கூடுமிடமெல்லாம் உன்னைப் பற்றி கதையாதவரில்லை
உன்னை அறிந்தவரில் உன் புகழ் கூறாதவரிலலை
உன்னை உணர்ந்தவரில் உன் எழில்வதனம் மறந்தவரில்லை!

எம் கண்களில் ஒளியே நீயல்லோ
எம் காதுகளின் பாய்ந்த தேனமுதக் குரலவனே
நீயில்லா இவ்வுலகில் யார் நிறைப்பார் உன் இடத்தே!!!

உன் நினைவில் பரிதவிக்கும்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவுகள்.

தகவல்,
வனஜா உதயகுமாரன் (சகோதரி)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
வனஜா உதயகுமாரன் (சகோதரி) - நோர்வே
தொலைபேசி : 004748078645