1ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விகிலா பரஞ்சோதி

ஜெர்மனி Bad Ems ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விகிலா பரஞ்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், பரஞ்சோதி(உரும்பிராய்) சகிலா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

வினித் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

பொன்னான மேனியில் பொல்லாத நோய்
வந்ததென்ன அல்லைப்பூ மேனியில்
அறியாத நோய் வந்ததென்ன
தங்கம் போல் மேனியில் தங்கும்
நோய் வந்ததென்ன
உள்ளத்தோடு கட்டி வைக்க
உதறிவிட்டு போய் மறைந்தாய்
உடம்போடு கட்டி வைக்க உலுப்பிவிட்டுப்
போய் மறைந்தாய்
பழுவோடு கட்டிவைக்க பறித்துவிட்டு
போய் மறைந்தாய்

அன்பின் மகளே! செல்வி விகிலா
ஓடி மறைந்ததம்மா ஓர் ஆண்டு- உன்
நினைவால் ஓராயிரம் ஆண்டு சென்றும்!
ஓய்ந்திடுமோ உன் நினைவு – எம்மை விட்டு
அன்பின் மகளே விகிலா உன் மலர்வால்
செழித்ததம்மா எம் குடும்பச் சீரும் சிறப்பும்
உன் அழகையும், அன்பையும், பண்பையும்
நட்பையும் பாராட்ட நாம் கேட்டு
ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தோம்

விழுந்ததம்மா எம் வாழ்வில்
உன் மரணத்தின் இடியோசை
இயமனையும் வென்றிட எத்தனையோ
முயற்சிகள் நாம் எடுத்தோம் முடியவில்லை
மரணத்தின் நாள் தெரிந்தும் மலர்ந்த
முகத்துடனே வந்தோரை வரவேற்றாய்
நாட்களை எண்ணி நீ வாழ்ந்தாலும்
நாளேட்டில் நீ குறித்ததனை நாம் மறவோம்!

இறுதி விருப்பம் எதுவென கேட்க
சட்டென சொன்னாய் மகளே…
அமெரிக்கா பார்க்கவேண்டும் என…
உன் ஆசையை நிறைவேற்ற
உடனே சென்றோம் அமெரிக்காவுக்கு
உல்லாசமாக சுற்றினாய் மகளே – ஆனால்
காலம் முழுவதும் எம்மோடிருப்பாய் என்ற
எம் ஆசையை நிறைவேற்றாமல்
கொடிய நோயைத் தந்து
காலனவன் உன்னைக் கவர்ந்ததேனோ?

எத்தகையான உறுதியது உனக்கிருந்தால்
உன் மரணத்தில் உற்றார், உறவினர்
கூடியிருக்க தாய்மாமன் அருகில் இருக்க
தாய், தந்தை, தம்பி, பேரன், பேத்தி
தவித்திருக்க நீ விரும்பிய இசை கேட்டு
இமைமூடிய காட்சி இன்னும்
மறையவில்லை எம் மனதைவிட்டு
மகளே நீ வருவாயோ… தவிக்கின்றோம்!!!!

உன் நினைவால் அன்பின் தாய், தந்தை, தம்பி, உற்றார், உறவினர், நண்பர்கள்

எம்மகளின் நிகழ்விலும், நினைவிலும் கலந்து கொண்டும் தொலைபேசி மூலம் எம்முடன் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியும் எல்லா வகைகளிலும் உதவிகளை செய்து தந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எமது மனமார்ந்த நண்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பரஞ்சோதி(தந்தை) — ஜெர்மனி
தொலைபேசி : +492603508629