3ம் ஆண்டு நினைவஅஞ்சலி

அமரர் விஸ்வலிங்கம் விமல்ராஜ்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், அம்பாறை அக்கரைப்பற்றைப் புகுந்த இடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் விமல்ராஜ் அவர்களின் நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று ஓடிமறைந்தாலும்
அரவணைக்க யாருமின்றி அனாதைகளாய்த் தவிக்கின்றோம்
எண்கள் வாழ்வில் என்றும் நினைத்து பார்கமுடியாத கொடியநாள்
ஏன் வந்தது ஆடி இரண்டாம் திகதி

நாம் கடந்து வந்த பாதையை பார்கின்றேன்
நல்லதை செய்ய நினைத்தால் – அதை
நம் மனசு மறுக்கும் முன் உடனே செய்யவேண்டும் என்பீர்கள்
நாம் இருவரும் கட்டிய கூட்டிற்குள்
நாங்கள் மட்டுமா தனிமையில் தவிப்பது
நீங்கள் இல்லாத கூட்டிற்குள் நின்மதி ஏது நித்திரை ஏது
நித்தமும் நியமேன்று நிழல் தரும் மரமாக
நேற்று இன்று மட்டுமா என்னும் எத்தனை
காலம் கடக்கபோகின்றோம்

விதி நம்மை சேர்த்தும் சதிவலை விரித்தது
விதம் விதமமான சொற்களால் எங்களை சாகடிக்கின்றார்கள்
எல்லோருடைய இதையதிலும் காயங்கள் உண்டு -அதை
எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான்
வித்தியாசங்கள் உண்டு
உரிமை உள்ளவர்களிடம் கண்ணீராகவும்
உரிமை அற்றவர்களிடம் புன்னகையாகவும்

தோல்வி அடையும் போது தோற்றவர்களை
நாம் காயப்படுத்த கூடாது
தோழாக நின்று உதவி செய்யவேண்டும்
தோல்விகள் கதவை மூடும் போது
தொடர்ந்து விடா முயற்சியுடன் -கதவுகளை
தட்டி திறப்பதுதான் வெற்றிக்கான சாவி

ஆண்டுகள் மூன்று ஓடிமறைந்தாலும்
அரவணைக்க யாருமின்றி அனாதைகளாய்த் தவிக்கின்றோம்
எண்கள் வாழ்வில் என்றும் நினைத்து பார்கமுடியாத கொடியநாள்
ஏன் வந்தது ஆடி இரண்டாம் திகதி

நாம் கடந்து வந்த பாதையை பார்கின்றேன்
நல்லதை செய்ய நினைத்தால் -அதை
நம் மனசு மறுக்கும் முன் உடனே செய்யவேண்டும் என்பீர்கள்
நாம் இருவரும் கட்டிய கூட்டிற்குள்
நாங்கள் மட்டுமா தனிமையில் தவிப்பது
நீங்கள் இல்லாத கூட்டிற்குள் நின்மதி ஏது நித்திரை ஏது
நித்தமும் நியமேன்று நிழல் தரும் மரமாக
நேற்று இன்று மட்டுமா என்னும் எத்தனை
காலம் கடக்கபோகின்றோம்

விதி நம்மை சேர்த்தும் சதிவலை விரித்தது
விதம் விதமமான சொற்களால் எங்களை சாகடிக்கின்றார்கள்
எல்லோருடைய இதையதிலும் காயங்கள் உண்டு -அதை
எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான்
வித்தியாசங்கள் உண்டு
உரிமை உள்ளவர்களிடம் கண்ணீராகவும்
உரிமை அற்றவர்களிடம் புன்னகையாகவும்

தோல்வி அடையும் போது தோற்றவர்களை
நாம் காயப்படுத்த கூடாது
தோழாக நின்று உதவி செய்யவேண்டும்
தோல்விகள் கதவை மூடும் போது
தொடர்ந்து விடா முயற்சியுடன் -கதவுகளை
தட்டி திறப்பதுதான் வெற்றிக்கான சாவி
தோற்றவன் வெற்றி அடையும் போது அவன்
வாழ்ந்த வார்த்தை இல்லாமல் போய்விடும்

வாழ்கை என்பது நீங்கள்
வாழ்க்கை என்பது நீங்கள் சாகும் வரை அல்ல
வாழும் வரை நீங்கள் மற்றவர்களின் மனதில் இருப்பது தான்
பேசும் உயிர் ஓவியத்திடம் பேசாத எழில் ஓவியமாக இருக்கின்றீர்கள்
விடியும் வரை தெரியாது காண்பது கனவென்று அது போல்
முடியும் வரை தெரியாது இது தான் வாழ்கையின் நிஜமென்று

உரிமை கொள்ள உறவுகள் ஆயிரம் இருந்தும்
உள்ளத்தை புரிந்து கொள்ள உங்களை போல் யாரும் இல்லை
உண்மையான அன்பும் பாசமும் உள்ளவர்கள் -இன்னும்
உரிமையோடு வாழ்கின்றார்கள் அவர்கள் உன்னதமானவர்கள்
உங்கள் ஆசை போல் நம் பிள்ளைகளை உயர வைப்பது தான் என் கடமை
அதை நிச்சயம் செய்வேன்

எண்கள் அன்பு அப்பாவிற்காக ஒரு மடல்

ஏழ்மையிலும் ,நேர்மையிலும் ,கோபத்திலும் ,பொறுமையிலும் ,
தோல்வியிலும் ,விடாமுயற்சியிலும் துன்பத்திலும் ,துணிவிலும் ,வறுமை யிலும்
உதவி செய்யும் மனம்
செல்வதிலும் எளிமை .பதவியிலும் பணிவு இவை அனைத்திற்கும்
ஒருவராய் இருந்தீர்கள் அப்பா
சிரித்து சிரித்து பேசுவீர்கள் சிறப்பாக வரவேற்பீர்கள் அப்பா
சிந்தித்து சிறப்பாக செயல் படுவீர்கள் அப்பா
சிலர் சிறு உதவிசெய்தாலும் அதை
சிறப்போடு பலமடங்காய் செய்வீர்கள் அப்பா

உங்கள் சிரிப்பில் எங்களை மறக்கின்றோம்
உங்கள் பார்வையில் மீண்டும் உங்களுடன் வாழ்கின்றோம்
கொதிக்கும் மணலில் நடக்கும்ம் போது -ஒரு நினலை தேடுகின்றோம் -அப்படி
நாங்கள் தேடும் நிணல் தான் உங்கள் அன்பு
பூக்களாக இருக்காதீர்கள் உதிர்ந்து விடுவீர்கள்
பூகொத்துகளாக இருங்கள் அது பன்மடங்காகும் என்பீர்கள்
செடியாக எங்களுடைய அம்மா இருக்கின்றார் -நாங்கள்
செடிக்கிளைகளாக இருந்து பூகொத்துகளாக பூத்து
அம்மாவிற்கு மனம் வீசும் காலம் விரைவில் வரும்

கற்றை போல எங்களை தொடர்கின்றீர்கள் -அது
அது காணமல் போன போது கண்ணீராய் வடிக்கின்றோம்
பாசம் என்பது கானல் நீரல்ல அது மறைவதற்கு
பந்தம் என்பதை காற்றை போல் சுவாசிப்பதனால்
உங்கள் உண்மையான அன்பு தெரிகின்றது
உங்களை போல் உருவங்களை பார்க்கும் போது
உடம்பே நடுங்கிவிடும் அது அப்பா வென்று
எல்லோரும் நினைப்பார்கள் இவர்களுக்கு என்ன என்று
எங்களுக்கு எல்லாம் இருந்தும் நீங்கள் இல்லையே அப்பா
நன்மையிலும் தீமையிலும் நாங்கள் இருக்கின்றோம் என்பார்கள்
நன்றிக்காக நான்கு ஐந்து மாசங்கள் வருவார்கள்
நாளடைவில் நமக்கு யார் இவர்கள் என்பார்கள்
நாங்கள் பட்ட வேதனைகள் யாரும் படக்கூடாது
நன்றி உள்ள கடவிளிடம் கேட்கின்றோம்
நம்பிக்கையுடன் அடுத்த பிறவியிலும்
நாங்கள் உங்கள் பிள்ளைகளாக பிறக்க
வரம் கொடு என்று

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம்
பிராத்திக்கின்றோம்

தகவல்
மனைவி ,பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு