1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி

திதி : 14 மார்ச் 2014

புங்குடுதீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்த நாள் முதல் இறுதிவரை
இணைபிரியா வாழ்வதனை வாழ்ந்தோம்
யார் கண் பட்டதுவோ யான் அறியேன்
சிரித்துப்பேசி எனை ஏமாற்றிச் சென்றதேனோ..?
இருந்த இடம் தேடி தினம் புலம்புகின்றேன்

ஆலமரத்தில் அழகாய் கூடுகட்டி அதில்
பாசமழை பொழிந்து பகலிரவாய்
பாடுபட்டு பண்போடு காத்து வந்த
நேசமக்களை பாதியில் விட்டுப் பிரிந்தது ஏனோ அப்பா

மண்ணில் உயர் மனிதராய் வாழ்ந்த
நீங்கள் எம்மையும் இவ்வுலகில் உயர்
மக்களாய் வாழவைத்தீர்கள்
சிந்தையில் அறிவைத்தீட்ட சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அப்பா
மண்ணுக்கும் மக்களுக்குமாய் உங்கள்
உடல் உழைப்பை உவந்து அளித்தீர்கள்
அன்புடன் எம்மை அரவணைக்கும்
எங்கள் மாமாவே அமைதியின் உறைவிடமே
உங்களை என்றும் நேசிக்கின்றோம்

அன்புள்ள தாத்தாவே அப்பப்பாவே
உங்களைப் போல் ஒருவரை நாம் சந்தித்ததில்லை
அன்பில் அறிவில் ஆற்றலில் உங்களுக்கு
நிகர் நீங்களே உங்கள் நினைவுகள்
என்றும் எம் இதயத்தில் நிறைந்திருக்கும்

என்றும் எங்கள் மனதை விட்டு நீங்காத தெய்வமே
எங்கள் நல்வாழ்வுக்கு என்றும் உங்கள் நல் ஆசிகள்
எங்களை விட்டுப்பிரிந்து ஆண்டு ஒன்றாயினும்
உங்களின் இனிய நினைவுகளைச் சுமந்து நிற்கின்றோம்

தேறவழியுமில்லை தேற்றுதற்கு யாருமின்றி புலம்புகின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வானுலகு சென்ற எங்கள் அன்புத் தெய்வமே

என்றும் உங்கள் பாச நினைவுடன்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!!

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நந்தா தயாபரராசன்(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33148584736
விமலா பஞ்சலிங்கம்(மகள்) — கனடா
தொலைபேசி : +19055027645
உதயன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி : +4917622364240
லலி ரவீந்திரநாதன்(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94112365443