மரண அறிவித்தல்
அமரா் கந்தையா திருநாவுக்கரசு
விளானைப் பிறப்பிடமாகவும் சங்கரத்தை, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு (08.11.2015) ஞாயிற்றுக்கிழமை கொழும்ப கல்கிசையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மகாதேவி (சின்னபேபி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கந்தையா – இரத்தினம் தம்பதியரின் பாசமிகு மகனுமாவார்.
காலஞ்சென்றவர்களான கற்பகம், அன்னபூரணம், சம்மந்தன் ஆகியோரின் அருமை சகோதரரும், ஜெய்சங்கர், ஜெய்குணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், துவாரகா நகுலேஸ்வரன் ஆகியோரின் மாமனாருமாவார்.
அபிநயா, அக்சயா, கவிராஜ், கபிஸ்னா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (11.11.2015) பதன்கிழமை முற்பகல் 10.30 தொடக்கம் மாலை 4.30 மணிவரை கல்கிசை, மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு (12.11.2015) வியாழக்கிழமை பி.ப 1மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்