மரண அறிவித்தல்

அருட்சகோதரி புளோரினா பத்திநாதர்

அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி புளோரினா பத்திநாதர் அவர்கள் ௦9-10-2013 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பத்திநாதர் மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் ஞானரட்ணம், தேவரட்ணம், யோகரட்ணம், பாலரட்ணம், ஜீவரட்ணம், நவரட்ணம், குணரட்ணம், தவரட்ணம், தனரட்ணம், அருட்தந்தை ஜெபரட்ணம், விமலரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராசேந்திரம், காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் மரியதாசன், நவமணி, ஜசிந்தா, காலம்சென்றவர்களான பாபா, மரியற்றா, ஆனந்தராஜா மற்றும் அருள்தாசன், ஜெகசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 09-10-2013 புதன்கிழமை அன்று யாழ். கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவைக் கன்னியர் மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 10-10-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியில் இருந்து பி.ப 03:00 மணிவரை யாழ். மரியன்னை பேராலயத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அருட்தந்தை ப.யோ.ஜெபரட்னம் அடிகளார், மற்றும் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 10-10-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியில் இருந்து பி.ப 03:00 மணிவரை
இடம் : யாழ். மரியன்னை பேராலயத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
விமலரட்ணம் — இத்தாலி
தொலைபேசி : +39095381697
தனரட்ணம் — இத்தாலி
தொலைபேசி : +39091308547