மரண அறிவித்தல்
இந்திரவதி பொன்னம்பலம்

தலையாழி கொக்குவிலை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, ஐயனார்கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இறுதியாக கனடா ரொறன்ரோ ஜ வதிவிடமாகவும் கொண்ட இந்திரவதி பொன்னம்பலம் அவர்கள் 17.08.2012 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரதயன்(இலங்கை), தயாநிதி(சுவிஸ்), வசீகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வத்சலா(இலங்கை), சரவணப்பெருமாள்(சுவிஸ்), கௌரி(கனடா), விஐிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஐினிதேவி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற குமாரசாமி, திருப்பதிஅம்மா ஆகியோரின் மைத்துனியும், பிரியங்கன், சங்கீரனா, அஸ்வின், அனோஐன், மகிழன், ஆர்வலன், அகரன், மேகன், மாதுளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்