மரண அறிவித்தல்
இராசையா புஸ்பராஜா (இளைப்பாறிய கமத்தொழில் உத்தியோகத்தர் – முன்னைநாள் விசேட ஆணையாளா் கொக்குவில், கோண்டாவில்)
யாழ். ராஜகிரி பொன்னையா வீதி ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா புஸ்பராஜா அவர்கள் (14-10-2015) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி(பாக்கியரத்தினம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நளினி(கனடா), பவானி(இலங்கை), ஷாமினி(கனடா), மனோராஜ்(கனடா), பாலகுமார்(கனடா), ராஜ்குமார்(கனடா), யுவானி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மராஜா, யோகராஜா, நடராஜா, மகாராஜா(லண்டன்), புஸ்பராணி, பத்மராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகுமார், ராஜகாரியர், காலஞ்சென்ற கதிர்காமநாயகன், மாலினி, பூமா, லசந்தி, குற்றாலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரயதர்ஷினி, சுரேஸ்குமார், பிரதீபன், பிரஷாந்தன், அனோஜன், நிரோஜினி, அபிஷிந்த், விபிஷினி, வர்ஜினி, சரண்யா, தர்மினி, மரீனா, கிஷோரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹேஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்