மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை சண்முகநாதன்

தோற்றம்: 16.03.1950   -   மறைவு: 25.02.2019

சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், றக்காலேன், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் (25.02.2019) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான நல்லப்பு சின்னத்தங்கச்சி மற்றும் பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்

கிசோர், யசிந்தா, முத்துக்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் கருணானந்தன், செல்வராணி. ரதிகுமாரி, பிறேமலதா, பாபு ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, பாலசிங்கம், முரளிதரன் மற்றும் குகநேயன், ஜெகநாதன், செல்வராணி, பாலநாதன், பாலசிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தேவந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காந்தரூபனின் அன்பு மாமனாரும் தேவஸ்ரீயின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.02.2019) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு சுழிபுரம் மேற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
திருவடிநிலை இந்துமயா ன
திகதி : 28.02.2019
இடம் : சுழிபுரம்
தொடர்புகளுக்கு
குடுத்பத்தினர்