மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை சிவபாலன் (தேனப்பு)

  -   மறைவு: 13.01.2017

 

 

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபாலன் (தேனப்பு) நேற்று (13.01.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (அரியகுட்டி) – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு, பூரணி, நடராசா(குஞ்சன்), மற்றும் புட்கலை , பவளமலர், கனகசுந்தரம், அஞ்சலிதேவி(பொது சுகாதார மருத்துவ மாது – புதுக்குடியிருப்பு வைத்தியசாலை), ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சந்திரபாலன் (முகாமைத்துவ உதவியாளர் – நில அளவைத் திணைக்களம், வவுனியா), ஜெயபாலன் (ஆசிரியர் – விசுவமடு ம.வி), சாந்தி (ஆசிரியர், புதுக்குடியிருப்பு ம. கல்லூரி), குணபாலன்(பிரதேச செயலாளர் – கரைத்துரைப்பற்று), ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகலா, ரகுபரன்( ஆசிரியர், தேவிபுரம் அ.த.க பாடசாலை), துஷ்யந்தி, சிவாஜினி(ஆசிரியர், விளாத்திகுளம் அ.த.க பாடசாலை ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.01.2017) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

அந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
புதுக்குடியிருப்பு இந்து மயானம்
திகதி : 15.01.2017
இடம் : புதுக்குடியிருப்பு
தொடர்புகளுக்கு
குணபாலன்
தொலைபேசி : 0772487292