மரண அறிவித்தல்

கதிரித்தம்பி காளிதாசப்புலவர்

  -   மறைவு: 25.12.2016

வசாவிளானைப் பிறப்பிடமாகவும் ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி காளிதாசப்புலவர் 25.12.2016 ஞாயிற்றுக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி – அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் – சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கருணாதேவியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற புஸ்பவதி மற்றும் ரஞ்சிதமலர், திராவிடமலர் ஆகியோரின் சகோதரனும் ராஜகோபாலன்,ம் ரஞ்சினாதேவி, அகிலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் அனுரதன், அனுஷியா, அனுலா, அனுதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிரோஜினி, கஜேஸ்வரா, கிஷோரிவர்மன் ஆகியோரின் மாமனாரும் அஞ்யனி சருஞ்யன், லோகேஞ்யனி, சதுஸ்ரிகா, சபிரிஷன், கபினாஸ்,ஹரிவர்மன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.12.2016) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணிக்கு பூதவுடல் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
ஏழாலை உசத்தியோடை இந்து மயானம்
திகதி : 27.12.2016
இடம் : ஏழாலை
தொடர்புகளுக்கு
அனுதீபன்
கைப்பேசி : 0772487591