மரண அறிவித்தல்

கதிரிப்பிள்ளை சிவக்கொழுந்து (இளைப்பாறிய பிரதம தபாலதிபர், அகில இலங்கை சமாதான நீதவான்)

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை சிவக்கொழுந்து (இளைப்பாறிய பிரதம தபாலதிபர், அகில இலங்கை சமாதான நீதவான்) (30.07.2013) செவ்வாய்க் கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை மாணிக்கம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இணுவில் கிழக்கு இளைப்பாறிய ஆசிரியர் சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், தேவாம்பிகையின் அன்புக் கணவரும், தேவகுமாரி (ஆசிரியை, தொண்டமானாறு வீரகத்தி மகா வித்தியாலயம், யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை), கேசகுமாரி (அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்துறைத்துத் திணைக்களம், வடக்கு மாகாண சபை), புவனகுமார்(அமெரிக்கா), புவனகுமாரி(ஆசிரியை, குருநாகல், பரகஸ்தெனிய, தேசிய பாடசாலை), தர்மகுமாரி (அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா நகரசபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr. யோகேந்திரன் (வைத்திய பொறுப்பதிகாரி, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை நிலாவெளி), கேதீஸ்வரன் (ஆசிரியர், குருநாகல் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனும், ஹாஹினி, அகிலேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லமுத்து, பாலசிங்கம், குமாரசூரியர், பூரணம், ஆறுமுகம் மற்றும் திசைவீரசிங்கம்(ஜமேக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (04.08.2013) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் மு.ப.10.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
கிரியைகள்
திகதி : (04.08.2013) ஞாயிற்றுக்கிழமை
இடம் :
தகனம்
திகதி : (04.08.2013) ஞாயிற்றுக்கிழமை
இடம் : வல்லை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - சிவதேவி இல்லம் உடுப்பிட்டி. ,