மரண அறிவித்தல்
கந்தையா பாலசுந்தரம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு கோவில் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கணேசபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற துரையப்பா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும் ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும் ரூபகாந்தன்(அவுஸ்திரேலியா) சிந்துஜா, சுஜீவன், ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற பசுபதி,சரஸ்வதி,காலஞ்சென்ற அருமைரத்தினம், ஜெயரட்ணம், காலஞ்சென்ற தனலட்சுமி,பத்மநாதன் (லண்டன்), செல்வராசா,சாந்தினி(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அருள்தாஸ் (வர்த்தகர்), அவர்களின் பாசமிகு மைத்துனரும் காலஞ்சென்ற செல்வராசா, பாலசிங்கம் (இத்தாலி), பரராஜசிங்கம்(இத்தாலி), சிவஞானலட்சுமி, சிவகுமார், இந்திரகுமார்(இத்தாலி), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09.07.2013 செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணிக்கு கணேசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கணேசபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்