மரண அறிவித்தல்

கைலாசபிள்ளை பாலசிங்கம்

  -   மறைவு: 03.11.2016

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், தம்பனையை வதிவிடமாகவும், இல.83 கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை பாலசிங்கம் நேற்று (03.11.2016) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை – நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கனதிப்பிள்ளை – கமலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் தூயமலரின் அன்பு கணவரும், யுவராசா,மோகனதாசா, தர்சிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சோனியா, சாத்தியகலா,ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் நீக்சா, ஆரதி ஆகியோரின் அன்பு பேரனும், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் அமரசிங்கம்(இந்தியா), நாகேஸ்வரி(கிளி-தம்பானை), இராஜேஸ்வரி(இந்தியா), காலஞ்சென்ற மங்களேஸ்வரி மற்றும் வீரசிங்கம்(இந்தியா), திலகவதி(இந்தியா), ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மனோன்மணி, பரமலிங்கம், நல்லம்மா, காலஞ்சென்ற கேதாரலட்சுமி மற்றும் கனகாம்பிகை, கௌசலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (04.11.2016) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரின் நிரந்தர முகவரியான இல.83 கனகாம்பிகைக்குள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருநகர் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

நிகழ்வுகள்
திருநகர் இந்து மயானம்
திகதி : 04.11.2016
இடம் : திருநகர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0777171420