மரண அறிவித்தல்

“சமுகசுடர்” செல்லையா அன்னராசா (J.P )

(இளைப்பாறிய செயலாளர் ,வலி வடக்கு,பிரதேச சபை,செயலாளர் -ஓய்வூதியர் சங்கம் ,வலிவடக்கு கௌரவ காரியதரிசி -ஸ்ரீசிவ பூதராயர் தேவஸ்தானம் ,சுன்னாகம் தெற்கு)

சுன்னாகம் தெற்கை பிறப்பிடமாகவும்  மயிலிட்டியை  வசிப்பிடமாகவும் கொண்டவரும் தற்போது இணுவிலில்  வருபவருமான செல்லையா அன்னராசா நேற்று 23.06.2015 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமிப் பிள்ளை தம்பதியரின் அருமை மகனும் காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பத்மாவதியின் பாசமிகு சகோதரனும் சுப்பிரமணியம் ,சின்னத்தங்கம் ,முருகையா,கந்தசாமி ,மல்லிகாதேவி,புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,செந்தூரன்(அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,உள்ளுராட்சித் திணைக்களம் ,கைதடி) மயூரன்  (அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ,புள்ளி விபர தொகை மதிப்பீட்டு திணைக்களம் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,ஆர்த்திகா ,நீதிமதி ,(உதவி விரிவுரையாளர் ,நுண்கலைப்பீடம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )ஆகியோரின் அன்பு மாமனும் ,லயஹரி,யதூரன்,லக்ஷ்மினன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 24.06.2015 புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வட்டுவினி ஒழுங்கை ,இணுவிலிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

வட்டுவினி ஒழுங்கை

இணுவில் மேற்கு,

இணுவில்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24.06.2015
இடம் : பூவோடை இந்து மயான
தொடர்புகளுக்கு
செந்தூரன்
தொலைபேசி : 0777766550
மயூரன்
கைப்பேசி : 0775174872