மரண அறிவித்தல்

சறோஜினிதேவி கதிர்காமநாதன்

தோற்றம்: 24.09.1947   -   மறைவு: 31.03.2017

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை தட்டாதெரு, கனடா, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி கதிர்காமநாதன் அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, மகேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலேந்திரன்(பாபு), இராஜேந்திரம்(ராஜூ-கனடா), யோகேந்திரன்(யோகன்), காலஞ்சென்ற குலேந்திரன்(குலேந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அஜந்தா, ஜெயதீபா(கனடா), சுபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

Dr. சுதந்திரமதன், பாலமுரளி, Dr. பிரசாந்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,

திவ்யா, வித்யா, பிரீத்தி, குலேன், ஷாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியிலிருந்து பி.ப 01:00 மணிவரை ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பதினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ராஜீ
தொலைபேசி : +94769017266
கைப்பேசி : +16475453815