மரண அறிவித்தல்
சின்னத்துரை தனபாலசிங்கம் (சின்னண்ணை)
கச்சாயைப் பிறப்பிடமாகவும் இத்தாவில் பளையை வசிப்பிடமாகவும் துன்னாலை மேற்கு கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா சின்னத்துரை தனபாலசிங்கம் (சின்னண்ணை) கடந்த 02.08.2015 ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான தம்பிப்பிள்ளை – பாக்கியம் தம்பதியரின் பாசமிகு மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், அஜிதா (பிரதேச செயலகம், கரவெட்டி), மிதுலா (ஆசிரியர் மதியா மடு வித்தியாலயம்), துஜாந்தி (கிழக்கு பல்கலைக்கழகம்),சர்மினி (மாணவி வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் இராகுலனின் (ஆசிரியர் நெல்லியடி மத்திய கல்லூரி) பாசமிகு மாமனும் அட்சயாவின் அன்புப் பேரனும் துரைசிங்கம், இரத்தினசிங்கம், சுசிலாதேவி, இராஜேந்திரசிங்கம், குணம், வசந்தசிங்கம், ரகுசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் வசந்தலீலா, மலர், ராசு, சாந்தி, பாமா, ரஜி, பிரதீபா, செல்வநாயகி, காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் குலேந்திரதாஸ். ரமேஸ் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் நல்லையா கணேஸ்வரி, அனுசியா ஆகியோரின் உடன் பிறவாச் சகேதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.08.2015) வியாழக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு துன்னாலை மேற்கு
கரவெட்டியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேரூண்டை இந்து மயானத்துக்கு எடுத்துச்
செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
துன்னாலை மேற்கு கரவெட்டி.
நிரந்தர முகவரி
இத்தாவில் பளை.