மரண அறிவித்தல்

செல்லத்துரை செல்வராஜா

தோற்றம்: 02.06.1950   -   மறைவு: 11.09.2016

ஸ்ரீ செல்வா விவிநாயகர் ஆலய ஸ்தாபகரும் அறங்காவலரும் ஆகிய செல்வா என்று அன்பாக அழைக்கப்படும் செல்லத்துரை செல்வராஜா கடந்த (11.09.2016) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இந்த ஸ்தாபகரும், சைவக்கோயில் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் ஆவர். இவர் பல கலைகளுக்கும் புகழ் பெற்ற அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-செல்லம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வனும் இந்திரமதியின் அன்புக்கு கணவரும் ஷர்மிளா, ஊர்மிளா, Dr.ஸ்ரீகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் கருணா சேனாதிராஜா அவர்களின் அன்புத் தம்பியும் முரளீதரன், நிர்மலன், ஸ்ரீஹரி ஆகியோரின் அன்பு மாமனாரும் சரணியா, ஜெய், ஷயானா, பேபி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

மனிதநேயர் செல்வா ஜயாவின் இறுதி கிரியைகள் நாளை (18.09.2016) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும். அதே தினத்தில் தாயகத்தில் அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் அவரது சொந்த ஊரான அளவெட்டி மகாஜன மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இறுதி நிகழ்வும் ஆத்ம சந்திப் பிரார்த்தனை நிகழ்வும் நடைபெறவுள்ளதால் அனைவரையும் அதில் பங்கெடுத்து கொள்ளமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
அளவெட்டி மகாஜன மண்டப
திகதி : 18.09.2016
இடம் : அளவெட்டி
தொடர்புகளுக்கு
பா.சந்திரகுமார்
தொலைபேசி : 0777740958