மரண அறிவித்தல்

திரு செல்லையா கந்தசாமி

(முன்னாள் அதிபர் -யா/ஸ்ரீநாரதா வித்தியாலயம் -கரவெட்டி,யா /சித்திவிநாயகர் வித்தியாலயம் -பருத்தித்துறை)

அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,புலோலி மேற்கு,பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி (ஓய்வு நிலை அதிபர்)நேற்று 27.11.2015 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா- மங்கையற்கரசி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை -சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், இலக்குமி தேவியின் (ஓய்வு நிலை ஆசிரியை -யா /வட இந்து மகளீர் கல்லூரி) அன்புக் கணவரும்,

மலர்விழி (தாதிய சகோதரி -போதனா வைத்தியசாலை ,யாழ்ப்பாணம்), மதிவதனி (அபிவிருத்தி உத்தியோகத்தர் -பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்), வளர்மதி (லண்டன்), குகநேசன் (சிரேஸ்ட விற்பனை நிறைவேற்று அதிகாரி -சிலிங்கோ லைப்-நெல்லியடி), குகதாசன் (ஆசிரியர், மன்னார் கௌரியம்பாள் வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானச்சந்திரன் (தாதிய உத்தியோகத்தர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்)ஜெயக்குமார் (வாகனமதிப்பீட்டுஉத்தியோகத்தர் LOLC யாழ்ப்பாணம்) அன்ரன் பிறேமராஜன் (லண்டன்), நளினி உரிமையாளர் துளசி அழகுமாடம்நெல்லியடி) காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனும் கஜானன் (மாணவன் யா /இந்துக்கல்லூரி), யாதவி, கபிலேஷ், சிந்துஜன் (மாணவர்கள் -யா /மத்திய கல்லூரி யாழ்ப்பாணம்), கானுஜன், டிலான் (லண்டன்), தமிசா(லண்டன்), தேனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டனும், தவமணி தேவி(கொழும்பு), கோதைநாயகி (ஜெர்மனி), சோபிதமணி (அமெரிக்கா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ் சென்றவர்களான நித்தியானந்தம் சிவானந்தம் மற்றும், ரவீந்திரன் (அமெரிக்கா), கமலாம்பிகை, சீதாதேவி (ஓய்வு நிலை அதிபர் யா /சென்தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை) பார்வதிதேவி (லண்டன்), சுப்பிரமணியம் (பொறியியலாளர், சிங்கப்பூர்)காலஞ் சென்ற மயில்வாகனம், ருக்மணிதேவி (ஓய்வு நிலை பிரதியதிபர் -சாவகச்சேரி மகளீர் கல்லூரி), மகேஸ்வரி (உரிமையாளர் -லிபேர்டி மோட்டோஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி ,சிவசுப்பிரமணியம், பத்மநாயகி ,மற்றும் சதாசிவம்,இராசரத்தினம் (ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் -சாவகச்சேரி )பத்மநாதன் மணிமேகலை ஆகியோரின் சகலனும், தவானந்தம் (கனடா), சோமசுந்தரமூர்த்தி (ஜேர்மன்), ஜீவானந்தம் (கொழும்பு), சர்வானந்தம் (கனடா), மதன் (ஜேர்மன்), மதனி (கனடா), மதிபூசணன், அனுசன் சாருகேசி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிர்யைக்காக பி.ப 2.30 மணியளவில் சுப்பர் மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

26/4,1 ஆம் கட்டை, புலோலி மேற்கு, பருத்தித்துறை.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 29.11.2015
இடம் : சுப்பர் மடம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 226 4790