31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்

செல்வன் ஞானச்சந்திரன் ஞனோசன்

ஜேர்மனி Lubeck ஜ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானச்சந்திரன் ஞனோசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்,

அன்னார், ஞானச்சந்திரன் கவிதா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞதூரன், ஞவிர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

மாதம் ஒன்று மறைந்துவிட்டாலும்
மறப்போமா உன்னை நாங்கள்…
பொழுதும் விடியுதில்லை….
ஊனும் இறங்கவில்லை…..

நூறுமுறை அழைக்கின்றோம் நாங்கள்…
மீண்டும் எழுந்து வருவாயோ என…

இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோம்….
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் நினைவு மறவாது

அன்னார் ஞனோசன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஓடோடி வந்து எமது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்தும், இந்நாட்டில் இருந்தும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோர்களுக்கும், மலர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலத்து கொண்டு பல வழிகளிலும் உதவிகளை செய்து எமக்கு உறுதுணையாக நின்ற உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் 13-07-2013 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு An der Hülshorst 11, 23568 Lübeck என்னும் முகவரியில் மதிய போசனம் நடைபெறும்.

இவ் அழைப்பில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர், உறவினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு