மரண அறிவித்தல்,
செல்வன் நாகதேவன் பிரசாந்தன்

வவுனியா திருநாவற்குளத்தை பிறப்பிடமாகவும், லண்டன் லிவர்பூல் வோரிண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகதேவன் பிரசாந்தன் அவர்கள் 25-05-2013 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், நாகதேவன்(மோகன்) மனோரஞ்ஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
நிரஞ்சனா அவர்களின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற இந்திரசேகரம் நல்லம்மா(புதூர்), மற்றும் காலஞ்சென்ற சபாரத்தினம்(பூசகர் – புளியங்குளம் கந்தசாமி கோவில்) மனோன்மணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சற்றூபவதி(இலங்கை), ரஜனி(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
அமராவதி(அதிபர் ஓமந்தை மகாவித்தியாலயம்), சற்குனேஷ்வரி(இலங்கை) காலஞ்சென்ற மகேந்திரா(கிளி) மற்றும் கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,
வேதாரணியம்(கனடா), காலஞ்சென்ற கந்தையா, மற்றும் தர்மகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், ஆறுமுகம்(வினோ) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்