மரண அறிவித்தல்
செல்வன் லொயின்பேட் ரெனிசன் றொபேட்

யாழ்.பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லொயின்பேட் ரெனிசன் றொபேட் அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா, குணம், காலஞ்சென்ற றீற்றம்மா அகியோரின் அன்புப் பேரனும்,
ரெனிசன் றொபேட்(சின்னவன்) சந்திரா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
றியோணா(பிரான்ஸ்), ஷலோஜினி(லண்டன்), தனுசியா, தர்சனா, லொயின்றியா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பேசி புல்டன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
இம்மானுவேல்(துரைமணி-லண்டன்), மங்களா(லண்டன்), இந்திரா, வனிதா(லண்டன்), விஜிதா ஆகியோரின் பெறாமகனும்,
கெலன், யூலியற்(பிரான்ஸ்), இமல்டா(லண்டன்), துரை, வில்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று பி.ப 4:00 மணிக்கு பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ்.கொஞ்சேன்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்