மரண அறிவித்தல்

தங்கராசா பகவத்சிங்கம் (ஓய்வு பெற்ற நீர்ப்பாசன இலாகா வேலை மேற்ப்பார்வையாளர்)

  -   மறைவு: 24.09.2016

வலைஞர் மடத்தைப் பிறப்பிடமாகவும், முத்தையன் கட்டு வலதுகரை 4ஆம் கண்டம் பண்டாரவன்னியன் கிராம சேவையாளர் பிரிவை நிரந்திர வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா பகவத்சிங்கம் கடந்த (24.09.2016) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராசா – அக்கினேஸ் தம்பதிகளின் சிரேஷ்டா புத்திரனும் காலஞ்சென்ற சின்னத்துரை – புவனேஸ்வரி தம்பதியரின் மூத்த மருமகனும் தயாநிதியின் அன்புக் கணவரும் பகவத்ஜீவா (கனடா), தயாமதி, சுதர்சினி, சுபாஷினி, ஆகியோரின் அன்புத் தந்தையும் சுமதி (யாழ்ப்பாணம்), சுதாகரன் (முகுந்தன்), மதியழகன் (தலைவர் ஒட்டுசுட்டன் ப.தெ.வ.அ.கூ.சங்கம் கற்சிலைமடு), கமலதாசன் (பணியாளர் புளியங்குளம் ப.தெ.வ.அ.கூ.சங்கம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க திருப்பலி இன்று (26.09.2016) திங்கட்கிழமை மு.ப 9 மணிக்கு ஒட்டுசுட்டன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் நல்லடக்கத்திற்காக பேராறு பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பேராறு பொது மயானம்
திகதி : 26.09.2016
இடம் : ஒட்டுசுட்டன்
தொடர்புகளுக்கு
சுதாகரன்
கைப்பேசி : 0767473773
ஜீவா (மகன்)
கைப்பேசி : 0016478245796