மரண அறிவித்தல்

தர்மலிங்கம் தர்மராஜா (உரிமையாளர், சரண்யா மோட்டோர்ஸ்,யாழ்ப்பாணம்)

  -   மறைவு: 18.09.2016

யாழ்ப்பாணம் தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமான தர்மலிங்கம் தர்மராஜா கடந்த (18.09.2016) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், ஏழாலை மேற்கை சேர்ந்த சித்தம்பிரப்பிள்ளை – இலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், சுகந்தாவின் அன்புக் கணவரும், நிவேதா (யால்.வேம்படி மகளிர் கல்லூரி, பழைய மாணவி), சரண்யன் (யால்.இந்து,கொழும்பு இந்து கல்லூரிகளின் மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாக்கியலட்சுமி(கனடா), தர்மகுமார்(லண்டன்), காலஞ்சென்ற தர்மகுலேந்திரன் மற்றும் தர்மானந்தன் (கனடா), தர்மராணி (கனடா), தர்மாம்பிகை (கனடா), தர்மசீலன் (லண்டன்), தர்மபாலன்(கனடா)ஆகியோரின் அன்புக்கு சகோதரனும், சோமசுந்தரம், சுகேந்திரா, விமலேஸ்வரி, கமலநாதன், ரவீந்திரன், சுபத்திரா, செல்வராசி, ஏழாலை மேற்கைக் சேர்ந்த வசந்தா, சந்திரன், சாரதா, சாந்தா, ஆகியோரின் அன்பு மைத்துனரும் , K .N இராஜரட்ணம், தனேஸ்வரி, விவேகானந்தன், மகேந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை (22.09.2016) வியாழக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தாவடி இந்து மயானம்
திகதி : 22.09.2016
இடம் :
தொடர்புகளுக்கு
நிவேதா
தொலைபேசி : 0777110697
கைப்பேசி : 0712828017