மரண அறிவித்தல்

திருநாவுக்கரசு நாகரத்தினம் (உரிமையாளர் சாந்தி அச்சகம்)

மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நாகரத்தினம் நேற்று (07.10.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு செல்வநாயகி தம்பதியரின் அன்புமகனும், தனலக்ஷ்மியின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை (ஸ்தாபகர் மில்க்வைற்), மீனாட்சி தம்பதியரின் அன்புமருமகனும், ரவிந்திராதேவி, சந்திராதேவி, சாந்தாதேவி, கங்காதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், வேலாயுதம் (பிரதிஅதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி), நந்தகோபால் (மில்க் வைற்), தயாபரன் (தயா அச்சகம்), சிவன்ராஜ் (UK) ஆகியோரின் அன்புமாமனும், Dr.சரவணன், பாமா (மாணவி, விவசாய பீடம், யாழ்ப்பாணம்), கோகுலன் (மாணவன், யாழ். இந்துக்கல்லூரி), ரமணன் (இலங்கை மின்சார சபை லிகிதர்), ரேகா (ஆசிரியை, பெரியபுலம் மகாவித்தியாலயம்), சிவதர்ஷன் (மாணவன் தொழில்நுட்பக் கல்லூரி), யதுர்ஷன் (மாணவன், யாழ். இந்துக்கல்லூரி), குகதர்ஷன் (மாணவன், யாழ். இந்துக் கல்லூரி), சாரங்கன், சாம்பவி (UK) ஆகியோரின் அன்புப்பேரனும், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மகேஸ்வரன் மற்றும் இசைஞானவதி (கொழும்பு), கதிர்காமநாதன் (பிரான்ஸ்), விக்னேஸ்வரன் (கனடா), விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற விஜயசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சரோஜினிதேவி மற்றும் மதனாம்பிகை, ஈஸ்வரலிங்கம், காலஞ்சென்றவர்களான இரத்தின்கோபால், கனகராஜா (முன்னாள், மில்க்வைற் அதிபர்), மற்றும் லோகநாதன், பவநாதன், சபாரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு - அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.10.2012) திங்கட்கிழமை பி.ப.2.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - 575, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.