ஓராண்டு நினைவஞ்சலி

திருமதி.அருந்தவச்செல்வி தர்மராசா

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் அம்மா  உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா ! எமக்கு இப் புவியில்
எங்களுக்கு இழந்த துயர் நீக்க
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!


பெற்றோருக்கு  தலைமகளாய்
தரணியிலே நீ பிறந்தாய்
உற்றவயதில் உன் துணையை
உன்னதமாய்க்கரம் பிடித்த நீ
இம்மியளவும் குறையில்லா
இனிதான வாழ்வு வாழ்ந்து
பாரினிற்க்கு பண்பானபிள்ளைகள்
நான்கையும் பெற்றுத்தந்துவிட்டு
உற்ற துணையையும்.பிள்ளைகளையும்
பாதியிலே  பரிதவிக்கவிட்டு
எங்குதான் சென்றாயோ அம்மா !

 

ஆண்டொன்று
ஆனாலும்  ஆறவில்லை
எம்மனது  என்றென்றும்
உங்கள்  நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கிற
உங்கள்
அன்புக்  கணவன் , பிள்ளைகள்,
மருமக்கள், சகோதர சகோதரிகள்
உறவினர், நண்பர்கள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு