மரண அறிவித்தல்
திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தைத் தற்காலிக வசிப்பிடமாகவும், தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) தனது 78 ஆவது வயதில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அருள்பிரகாசத்தின் அன்பு மனைவியும், செல்வநாயகம்- குப்பிளான் ஓய்வு பெற்ற ஊழியர்- நில அளவைத் திணைக்களம், அருள்நாயகி – கோப்பாய், அருள்மாலினி – பிரான்ஸ் (யாழ்.போதனா வைத்தியசாலையின் ஓய்வுநிலைத் தாதி உத்தியோகத்தர்), அருட்செல்வி- கனடா (முன்னாள் ஆங்கில ஆசிரியர்), அருள் மலர் – இலண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரவதனா, குலசபாநாதன், பாலசுப்பிரமணியம், சற்குணராஜா மற்றும் காலஞ்சென்ற பிரபாகரன் – இலண்டன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்,
கிரிசாந், ரவிசாந் (ஊடகவியாளர்), சசிகாந், கயன், சுரபி, சயந்தன், அபிராமி, அகல்யா, சுபேந்தா, நிகேசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை (06.01.2015) காலை 08 மணிக்கு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காகக் கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
வை.செல்வநாயகம் (மகன்)
குப்பிளான்-