மரண அறிவித்தல்
திருமதி ஆறுமுகம் இரத்தினம்மா (விசாலாட்சி அண்ணி)

கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வீமன்காமம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரத்தினம்மா அவர்கள் 30-01-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாலானபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகாதேவி, காலஞ்சென்ற வயித்திலிங்கம்(நீர்வேலி), காலஞ்சென்ற திலகர்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பிறைசூடி(தெல்லிப்பளை), கோபாலன்(வட்டகச்சி), பரம்சோதி மல்லாவி(சுவிஸ்), பரமேஸ்வரி(திருகோணமலை-கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரகுமாரன்(பிரான்ஸ்), உருத்திரகுமாரன்(பிரான்ஸ்), சந்திரகுமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரஞ்சனா(பிரான்ஸ்), றஞ்சினி(பிரான்ஸ்), லில்லி மலர்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
இராதிகா, இராஜாராம், இரஜிதா, இரகுராம், இராதை, அஜந்தன், ஆனந்து, காலஞ்சென்ற ஆரணிக்குஞ்சு, ஆரனன், ஆரங்கன், சமினா, சாம்சன், சந்தேர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்த்திகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்