, மரண அறிவித்தல்,
திருமதி இராசம்மா ஞானசேகரம் (சத்தியபாமா)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா ஞானசேகரம் அவர்கள் புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
26.06.2013
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராஜேஸ்வரி(ஜேர்மனி), சிவனேஸ்வரி(கனடா), சிவராஜன்(கனடா), சிவபாலன் (கனடா), சிவயோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராஜா, மகாலிங்கம், பிருந்தா, சத்தியபாமா, உதயகுமாரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆனந், பிரியா, சலோ, ஜெசி, அனோபா, அபிரா, பிரகாஷன், சுரேஷன், உஷாந்திகா, அபிஜா, ஆரோன், அனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷரோன், மாயா, ஜோயலின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2013 சனிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை Highland Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்