மரண அறிவித்தல்

திருமதி கதிர்காமநாதன் மனோன்மணி

யாழ். சரசாலை வடக்கு, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் பெரிய நாவலடி, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிர்காமநாதன் மனோன்மணி (16.07.2016) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா -பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

கதிர்காமநாதனின் அன்பு மனைவியும்,

நல்லம்மா காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னுச்சாமி, செல்வநாயகி, மற்றும் செல்வராசா, நாகராசா, ஜெயராசா, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

கௌரிமாலா (பார்லின்), நகுலேஸ்வரன் (அமெரிக்கா), ஜெகதீஸ்வரன் (நீர்வேலி), நந்தினி (கனடா), ஜெயந்தினி (வரணி இயற்றாலை அ.மி.த.க பாடசாலை), ஜெயகௌரி (வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் தென்மராட்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிற்றம்பலம் (பார்லின்), சறோ (அமெரிக்கா), அபிராமி, நந்தகுமார் (சக்தி ஸ்ரோர் கொடிகாமம்), ஜெயக்குமார் (அஞ்சல் அலுவலகம் – கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கௌசிகா, குருபரன், கரிகரன், அட்சிகா, ஐஸ்வர், தட்சிகா, லிந்துஜா, விபுநந்தா, விபுலா, விஸ்னிகா, பிரதுஷன், லக்சிகா, ரிஷானுகா, ரிஷிகேசன் ஆகியோரின் பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.07.2016) புதன்கிழமை பிற்பகல் 1மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேவில் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (20.07.2016)
இடம் : வேவில் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 9598647