மரண அறிவித்தல்
திருமதி கனகாம்பிகை பாலசுந்தரம்

தெல்லிப்பளை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை பாலசுந்தரம் அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா(வீமன்காமம் வடக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமர், வள்ளிப்பிள்ளை(ஆவரங்கால் சிவதலம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர் பாலசுந்தரம்(யூனியன் கல்லூரி-ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr.கயல்விழி(அவுஸ்திரேலியா), யாழ்கோவன் ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
காலஞ்சென்ற இராசலக்சுமி, திருஞானசம்பந்தமூர்த்தி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற குருமூர்த்தி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யுசீலானந்தன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சின்னத்துரை(ஆவரங்கால் சிவதலம்), காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற இராசலிங்கம், செல்வபாக்கியம், மகேஸ்வரி, பூமணி, காலஞ்சென்ற பூலோகசிங்கம், காலஞ்சென்ற சிவராசலிங்கம், சரஸ்வதி, தவயோகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யௌவனா, மிதூசனா, ருக்சன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவன், பிள்ளைகள்