மரண அறிவித்தல்
திருமதி. கருணாகடாச்சி சிதம்பரநாதன்

ஊர்காவற்றுறை கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும் , வெள்ளவத்தை கொழும்பிலும் ,
தற்போது ,கனடாவில் வசித்தவருமாகிய திருமதி. கருணாகடாச்சி சிதம்பரநாதன் அவர்கள் ஜூன்
24ம் நாள் 2015, புதன்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்ற திரு.நல்லதம்பி
சுப்பையா , திருமதி. முத்துப்பிள்ளை சுப்பையா அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற
தம்பிமுத்து, செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், காலம் சென்ற தம்பிமுத்து சிதம்பரநாதன்
[முன்னை நாள் வசந்த மஹால் உரிமையாளர்]அவர்களின் ஆருயிர் மனைவியும், காலம் சென்ற
வாமதேவன், அன்னலட்சுமி ஆகியோரின் அருமை சகோதரியும் ,பார்வதி ,நவரட்ணராஜா
ஆகியோரின் அன்பு மைத்துனியும், திருமதி.இந்திராணி நாகேந்திரம் [CEO-Villa Karuna Home for Seniors] திருமதி. விஜயராணி அன்டனி [Viji Antony Legal Help] திருமதி.வசந்தராணி வைத்திலிங்கம் [Liberty @ Kennedy Tax Office] ஆகியோரின் பாசமிகு தாயாரும் திரு. நாகேந்திரம் ராமலிங்கம் [SKN Financial], திரு.ஜோ அன்டனி[TTC] திரு.வரன்
வைத்திலிங்கம்[Liberty @ Kennedy Tax Office] ஆகியோரின் அருமை மாமியாரும், குமரேசன் ,
சதீசன், கிருசாந்தன்,சேரா, சிந்தியா, ஜெனொதன், ஆதர்ஷ் , அபிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் Ogden Funeral Homes எனும் இடத்தில் நடைபெறும்.