மரண அறிவித்தல்
திருமதி கலாராணி ரஞ்சித் விக்னராஜா (இரத்மலானை இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை)

வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாராணி ரஞ்சித் விக்னராஜா அவர்கள் 24-08-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம் கதிரம்மாள் தம்பதிகளின் ஆசை மருமகளும்,
ரஞ்சித் விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுவீட்டினா அவர்களின் பாசமுள்ள தாயாரும்,
பவானி, வானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 27-08-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை 1810 Albion Road, Etobicoke, On, M9W 5T1 எனும் முகவரியில் அமைந்துள்ள Glendale Funeral Home & Cemetery எனும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவர், மகள்