மரண அறிவித்தல்

திருமதி காந்திமதி சண்முகசுந்தரம்

மலேசியாவை பிறப்பிடமாகவும் உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி காந்திமதி சண்முகசுந்தரம் (பாப்பா) அவர்கள் (24.05.2016) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை சண்முகசுந்தரத்தின் (ஓய்வு நிலை A.O) பாசமிகு மனைவியும், சண்முகப்பிரியா (கனடா), பராபரி (ஆசிரியை, யா/ ஸ்கந்தவரோதயா கல்லூரி), யமுனா (சுகாதார அமைச்சு – கொழும்பு), கங்கா (லண்டன்) ஆகியோரிக் பாசமிகு தாயாருமாவார்.

ப.நிமலன் (நிம்மி – கனடா), செ.நிமலன் (கொழும்பு), சி.அகிந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

யதுமிதா, ஹரிஷ் ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி, பரமானந்தன், இரத்தினசிகாமணி (மணி), புவனேஸ்வரன் (கிச்சி), மற்றும் சரவணபவன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.05.2016) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இருளன் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (26.05.2016)
இடம் : இருளன் மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 656 9118