மரண அறிவித்தல்
திருமதி சாந்தி சறோஜினி பொன்னம்பலம் (முன்னாள் தொலைதொடர்பு உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம், வவுனியா)
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ் வண்ணார்பண்னை ஓட்டுமடம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி சறோஜினி பொன்னம்பலம் அவர்கள் 01-09-2014 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, ஞானம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், திரு.திருமதி காராளசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிலா(லண்டன்), அனுஜா(லண்டன்), நோயல் றொசான்(கனடா), பிரசாந்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தகுமார்(கொழும்பு), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரஞ்சன்(லண்டன்), அன்ரனி கைலன்(லண்டன்), ஜெபதர்சிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவரூபி(கொழும்பு), புவனேந்திரகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றோய், டினா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாலோம்(சுவிஸ்) அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
டானியல், ஸரியளா, அன்றியன், அஸ்பியன், அபிஸேக், ஜெமுவல் அகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்