மரண அறிவித்தல்
திருமதி சிவசோதி தவமணி (ரூபி / குஞ்சு)

சாவகச்சேரி கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிவசோதி தவமணி அவர்கள் 31-01-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
லவணன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
மதுரா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
லவின்(பிரான்ஸ்) அவர்களின் அருமைப் பேத்தியும்,
இராசயோகவதி, மங்கையக்கரசி ஆகியோரின் சகோதரியும்,
செல்வதி, காலஞ்சென்ற கமலாச்சி, செல்வினி ஆகியோரின் மைத்துனியும்,
வசந்தினி, சுகந்தினி, றாயினி, தர்மபாலன் ஆகியோரின் சிறிய தாயாரும், தேனுகா, மதியுகன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
றாஜ்குமார், றஜனி, றஞ்சித்குமார், கவிதா, சுரேன், யோகராஜா, பவா, இளங்கோ, சுபா, செல்வராசா, சிவகுமார், வசந்தி, வசந்தன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் குச்சிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
லவணன் – மகன் – பிரான்ஸ்