மரண அறிவித்தல்
திருமதி சிவஞானம் தவமணிதேவி (ராசாத்தி)

மரண அறிவித்தல்
பிறப்பு 17.04.1951 இறப்பு 24.05.2015
திருமதி சிவஞானம் தவமணிதேவி (ராசாத்தி)
அச்சுவேலி வடக்கு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பாம் ரோட் மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட அச்சுவேலி விஜிதா அரிசி ஆலை உரிமையாளர் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், இராமலிங்கம் வீதி, முடமாவடி நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகமணி இரத்தினவடிவு தம்பதியினரின் மூத்த மருமகளும், திரு.திருமதி ஐயாத்துரை (இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்) அவர்களின் சம்பந்தியும், ஓய்வு பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உத்தியோகத்தர் அமரர் சிவஞானம் அவர்களின் பாசமிகு மனைவியுமான தவமணிதேவி அவர்கள் 24.05.2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழைமை கொழும்பில் காலமானார்.
அன்னார் சஞ்ஞீவன் (TRAIDER-சிங்கப்பூர்), ராஜேந்திரா (SELECT-U.K.), பார்த்தீபன் (DOCTOR-U.K.) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தாரணி, கல்பனா, ரேணுகா ஆகியோரின் மாமியாரும் , அக்ஷயன், ஜென்சன், ஜானகி, ஜெஸ்னவி ஆகியோரின் பேர்த்தியாரும், அமரர் சந்திரலிங்கம் (மாவட்ட நீதிமன்றப் பதிவாளர், பருத்தித்துறை), பூபாலசிங்கம் (உரிமையாளர், கோசலா என்ரபிறைசஸ்,கொழும்பு), புஸ்பராணி, தேவராணி (U.K.), சிவபாதலிங்கம், தனபாலசிங்கம் (உரிமையாளர்கள்,விஜிதா அரிசி ஆலை, அச்சுவேலி) ஆகியோரின் அன்பு சகோதரியும், செல்வராணி, நற்குணவதி, ஜெலஐா, அமரர் ரெஜிதா, நடராசா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ஜெகேந்திரபோஸ் (U.K.), செல்வஞானம்(கனடா), இந்திரன்(ஜேர்மனி), ஸ்ரீதர்(கனடா), ராசன் (ஜேர்மனி), வாசு (பிரான்ஸ்), ரஜீவன்(கனடா), வெள்ளை(கனடா), குமார் (பிரான்ஸ்), வனஜா(கனடா), சுகிர்தா(U.K.) ஆகியோரின் மைத்துனியும், கிரிசாந் (கோசலா என்ரபிறைசஸ்,கொழும்பு), சாருஜன்(PAN ASIA BANK, நெல்லியடி), சங்கீர்த்தா, சரண்ஜா, சாகித்தியா, திலோஜினி, கார்த்திகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27.05.2015 இன்று புதன் கிழமை பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 28.05.2015 வியாழக்கிழமை, 19/2, பாம் ரோட், கொழும்பு-15 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் பகல் 1.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைக்காக கொழும்பு, மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்
சி.சஞ்ஜீவன்(மகன்)
தொ.இல-0717341194