மரண அறிவித்தல்
திருமதி சிவலிங்கம் கமலாதேவி (மணி அக்கா)

மரண அறிவித்தல்
திருமதி சிவலிங்கம் கமலாதேவி (மணி அக்கா)
சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும், வைரவர் கோயில் ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிடமாகவும், தற்போது வெள்ளவத்தை கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவலிங்கம் கமலாதேவி (மணி அக்கா) 01.05.2015 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற காசிப்பிள்ளை – பூரனம் தம்பதியினரின் அன்புக் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை-அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், ஆழ்வாப்பிள்ளை சிவலிங்கம் (உரிமையாளர் லா பான்சி மானிப்பாய்),அவர்களின் அன்பு மனைவியும், உதயகுமார் (உரிமையாளர், நாயக பாலன் ஸ்ரோர்ஸ் மானிப்பாய்), சுரேஸ்குமார்(தலைமை, மருத்துவ தொழில் நுட்பவியலாளர், யாழ் போதனா வைத்தியசாலை), சுகந்தி (சிரேஸ்ட ஆங்கில விரிவுரையாளர், உயர் தொழில்நுட்ப நிறுவனம்,தெஹிவளை,கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாவானி (ஆசிரியர், சன்டிலிப்பாய் இந்துக்கல்லூரி), ராஜினி (ஆசிரியர்,உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை), சுபாகரன்(நில அளவையாளர்,(Bahrain)) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஆரண்யா (மாணவி, சைவ மங்கையர் கழகம், வெள்ளவத்தை,கொழும்பு), அனுஷிகா (மாணவி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை), அக்ஸிகா, ஆருக்ஸியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,செல்வநாயகம்(உரிமையாளர்,ஈஸ்வரி நகையகம் பருத்தித்துறை), பாலச்சந்திரன்(உரிமையாளர்,வாணி நகையகம் பருத்தித்துறை) காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(கம்பர் மாலை), கந்தையா(CTB பருத்தித்துறை), பூமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தில்லைவாசா சுதுமலை தெற்கு சென் ஆன்ஸ் வீதி மானிப்பாயில் 04.05.2015 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு 1.00 மணியளவில் எடுத்துச்செல்லப்படும், இவ் அறிவித்தலை உய்யார், உறவினர், நன்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்-
கணவர்,பிள்ளைகள் (நாயக பாலன் ஸ்ரோர்ஸ் மானிப்பாய்)
தொடர்பு-
0718175807
0777475166
0718569962