மரண அறிவித்தல்

திருமதி சிவலிங்கம் பாக்கியலட்சுமி (பாக்கி, அரசமுதியோர் இல்ல சிரேஷ்ட தாதியார்- யாழ். கைதடி)

தோற்றம்: 13.06.1944   -   மறைவு: 26.04.2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாக்கியலட்சுமி அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா(மாணிக்கம்) அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(மருந்தாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜிதா(நோர்வே), சுஜாதா(நோர்வே), அஜந்தா(இந்துக் கல்லூரி ஆசிரியை- வவுனியா புளியங்குளம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்கண்ணா(நோர்வே), கமலநாதன்(நோர்வே), ஸ்ரீகந்தநேசன்(எழுத்தாளர் புயல்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிஐயா சிவபாதசுந்தரம் அவர்களி்ன் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசாம்பாள், செல்லத்துரை, தேவதாசன், கனகலிங்கம், பவானலட்சுமி, மற்றும் குணவதி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரி(நோர்வே), யாழன்(நோர்வே), யுரதிஹா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.18,
இலந்தைக்குளம் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

நிகழ்வுகள்
அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில்
திகதி : 28.04.2017
இடம் : அரியாலை
தொடர்புகளுக்கு
அஜந்தா — இலங்கை
தொலைபேசி : +94212220558
கைப்பேசி : +94779681333
மகேஸ்கண்ணா — நோர்வே
கைப்பேசி : +4745032409
கமலநாதன் — நோர்வே
கைப்பேசி : +4791855828