மரண அறிவித்தல்

திருமதி செல்லமுத்து சங்கரப்பிள்ளை

தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது இலண்டன்(Croydon) ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லமுத்து சங்கரப்பிள்ளை அவர்கள் 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(Court Commissioner) அவர்களின் அன்பு மனைவியும்,

ஏகாம்பரநாதன்(இலண்டன்), தில்லைநாதன்(இலண்டன்), மலைமகள்(இலண்டன்), திருமகள்(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌரி(லண்டன்), Dr.கிருபாம்பிகை(லண்டன்), காலஞ்சென்ற காங்கேசன் மற்றும் தயாளசீலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செந்தூரன், சிவகாமி, சுகீலன், றஜீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சிவபாக்கியம் மற்றும் Dr.கதிர்காமசேகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை Oshwal Mahajanwadi, Oshwal Hall, 1 Campbell Road, Croydon, Surrey, CR0 2SQ என்னும் முகவரியில் நடைபெற்று, பின்னர் மு.ப 11:30 பி.ப 12:15 மணிவரை South London Crematorium, Rowan Road, SW16 5JG என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இல்லம் — பிரித்தானியா
தொலைபேசி : +442086539066
ஏகாம்பரநாதன் — பிரித்தானியா
கைப்பேசி : +447914188769
தில்லைநாதன் — பிரித்தானியா
கைப்பேசி : +447546220994
மலைமகள் — பிரித்தானியா
தொலைபேசி : +442085972822
திருமகள் — பிரித்தானியா
தொலைபேசி : +447814576622