மரண அறிவித்தல்
திருமதி செல்லையா இரத்தினம் (சின்னப்பிள்ளை)
அல்வாய் வடக்கு பாணம்பற்றையைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவில் தரவையை வசிப்பிடமகாவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இரத்தினம் அவர்கள் 19.01.2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும்,
ஆழ்வார் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மாணிக்கம் செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,
குலவீரசிங்கம், சிவராஜசிங்கம்(சுவிஸ்), நவரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும்,
வனிதாமலர் , நிர்மலா(சுவிஸ்), வானதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
இராஜ்கண்ணன் வரூதினி, திவாகரன்-சுபாஜினி, ஜெயநந்தினன்-வாகினி, திலீபன்-மனோஷா(சுவிஸ்), நிரோஜன்(சுவிஸ்), சவீசனா(சுவிஸ்), அஜந்தன்(லண்டன்), அஜித்(லண்டன்), அனோஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரிஹன், சாயித்தியன், மாதங்கி, செங்கணன், லரிசா, சமீஷா, கம்சன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணிதொடக்கம் பி.ப 12.30 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வர்மன்