மரண அறிவித்தல்
திருமதி செல்வராணி தயகுமார் (ராணி)

இலங்கை சிங்கைநகர் புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் கொல்ஸ்ரப்புறோ நகரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி தயகுமார் அவர்கள் 06-03-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, இலட்சுமி(புலோலி) தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற தங்கராசா, செல்வமணி(டென்மார்க்) தம்பதிகளின் மருமகளும்,
தயகுமார்(செல்வன்) அவர்களின் அன்புத் துணைவியும்,
மதுமி, இலக்கியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, இந்திராணி(டென்மார்க்), சந்திரமூர்த்தி(சந்திரன் – டென்மார்க்), மகேஷ்வரமூர்த்தி(மகேஷ்-லண்டன்), யோகராணி(இந்தியா), தவமூர்த்தி(பின்லாண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பன்னீர்ச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சூரியகலா, சூரியகுமார் மற்றும் கிருஷ்ணகுமாரி(லதா-லண்டன்), இந்திரகுமாரி(கீதா-லண்டன்), ராஜ்குமார்(ரதீஷ்-டென்மார்க்), கந்தவனம்(டென்மார்க்), யோகராசா(இந்தியா), நாகேஷ்வரி(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும்,
மரியராணி(ராணி-லண்டன்), கிருஷ்ணகுமாரி(குமாரி-டென்மார்க்), பிரதீபா(தீபா-டென்மார்க்) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2013 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை கொல்ஸ்ரப்புறோ வைத்தியசாலையின் அவசரப் பிரிவுக்கு அருகாமையில் உள்ள கப்பேலில் – 7500, Holstebro Sygehus Kapel என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்